×

ஊட்டியில் நாளை மலர் கண்காட்சி: ஒரு லட்சம் ரோஜாக்களால் டிஸ்னி வேர்ல்டு வடிவமைப்பு

ஊட்டி: நாளை மலர் கண்காட்சி துவங்கும் நிலையில், ரோஜாக்களால் பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில், ஆக்டோபஸ், காளான் மற்றும் பல்வேறு வடிவங்களை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 10ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 11 நாட்கள் 126வது மலர் காட்சி நடக்கிறது. இதையொட்டி, தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இன்கா மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. 45 ஆயிரம் தொட்டிகளில் உள்ள செடிகளில் மலர்கள் பூத்துகுலுங்குகின்றன. இவை காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 1 லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, காளான், ஆக்டோபஸ் மற்றும் மலர் கோபுரங்கள் உட்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான கார்னேசன் உள்ளிட்ட மலர்கள் பெங்களூர், ஒசூர் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இதுதவிர மலர்களை கொண்டு பல்வேறு ரங்கோலி, மலர் அலங்காரங்கள், மலர் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு அரங்கு அமைக்கப்பட்டுள்ளன. மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சியில் வைக்கப்படவுள்ளன.

The post ஊட்டியில் நாளை மலர் கண்காட்சி: ஒரு லட்சம் ரோஜாக்களால் டிஸ்னி வேர்ல்டு வடிவமைப்பு appeared first on Dinakaran.

Tags : Noodie ,Botanic Zoo ,Feeder ,
× RELATED சின்கோனா மூலிகை தாவரங்கள்...